Pages

Thursday, March 11, 2021

கவிதை

 

நிலையாமை

முன்பனிக் காலம்...

காலைப்பொழுது...

புல் மீது பனித்துளி...

முத்துகளின் நியாபகார்த்தம்...

நினைவுகளைச் சுமந்து செல்லும்

பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள்...!

அனைத்து உயிரினங்களும்

அதன் வேலைகளைத் தொடர்ந்து செய்கின்றன...

ஓர் உயிரினம் மட்டும்

வேலையை விட்டுவிட்டு

பிறரின் வேலையில் நுழைந்து விடுகின்றது...

அவ்உயிரினம் எது?

கொலைப் புரியும் கொடூர விலங்கோ..!

பயம் காட்டும் பயங்கர விலங்கோ..!

உயிரினைப் பறிக்கும் ஊர்ந்துவரும் விலங்கோ..!

இல்லை... இல்லை... இல்லவேயில்லை..!

இவற்றை விட...

மிகப்பெரிய விலங்கு ஒன்று உண்டோ..!

உண்டு என்று சொல்லக்கூடிய மகான்கள் உண்டு...

மகான்கள் என்று சொன்னதும் கேட்க தோன்றுகிறது...

மகான்கள் வாழ்ந்த காலம்... இக்காலமா...?

இல்லை... இக்காலத்தில் மகான்கள் இல்லை...

ஓ... அவன் தான் அந்த விலங்கோ...

ஆம்... இக்காலத்திய மனிதன்...!

சுயநல மிக்கவன்...

பிறரை மதிக்காதவன்...

அன்பு காட்டாதவன்...

கண்ணியம் அற்றவன்...

பெண்ணினத்தின் மீது அதீத இச்சைக் கொண்டவன்...

இன்னும்... இன்னும்... ஏராளம்...!

மனிதனைக் காக்கக் கூடியவன் யார்?

இறைவன் மட்டுமே..!

எம்மதம் சார்ந்தவன்?

மதம் அல்ல... மனஉணர்வைச் சார்ந்தவன்...

மனதை ஒருநிலைப் படுத்தியவர்கள் மகான்கள்..!

மனதைப் பலநிலையில் பயன்படுத்துபவன் மனிதன்...

மனிதனின் மனமும், புல் மீது உள்ள பனித்துளியும் ஒன்று...

பார்ப்பதற்கு அழகாக இருக்கும்...

காய்ந்துப் போகும் துளிகளாக மாறிய மனிதன்...!!!

கணித்தமிழ்த் திருவிழா

  தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிதி நல்கையுடன் நம் கல்லூரியில் செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக நிகழும் கல்லூரி அளவ...