Pages

Friday, January 7, 2022

கணித்தமிழ்த் திருவிழா

 




தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிதி நல்கையுடன் நம் கல்லூரியில் செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக நிகழும் கல்லூரி அளவிலான கணித்தமிழ்ப் போட்டிகளுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.


போட்டி விதிமுறைகள்
  • ஒரு மாணவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.
  • பதிவுப் படிவத்தில் தங்கள் விவரத்துடன் தாங்கள் பங்குபெறும் போட்டியின் விவரத்தையும் குறிப்பிடவேண்டும்.
  • காப்புரிமம் (Copyright) சார்ந்த விழிப்புணர்வுடன் மாணவர்கள் பங்குபெற வேண்டும்.
  • தங்கள் சொந்த முயற்சியே முதன்மையானது. பிறரின் ஆக்கங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • 10 நாட்களின் நிறைவில் தங்கள் படைப்புகளை psgcasthamizhua@gmail.com என்ற மின்னுஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
  •  வல்லுநர் குழுவினரால் தங்கள் படைப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு பரிசுகளுக்கான படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.

தமிழ் வலைப்பதிவு உருவாக்கம் (Tamil blog creation)
  • ப்ளாக்கர் அல்லது வேர்டுபிரசில் தாங்கள் உருவாக்கிய வலைப்பதிவின் முகவரியை கூகுள் படிவத்தில் வழங்கவேண்டும்.
  • வலைப்பதிவில் கணினித் தமிழ் சார்ந்த பதிவுகளை வழங்கவேண்டும்.
  • பிற இணையதளங்களிலிருந்து நகல் எடுத்து ஒட்டக்கூடாது.
  • தங்கள் பதிவுகள் சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும்.
  • 10 நாட்களில் தாங்கள் வழங்கிய பதிவுகளின் எண்ணிக்கை, தரம், பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் கருத்துரைகளையும் கொண்டு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்
தமிழ் மின்னூல் உருவாக்கம் (Tamil E book creation)
  • தாங்கள் உருவாக்கிடத் திட்டமிட்ட நூலின் தலைப்பை கூகுள் படிவத்தில் வழங்கவேண்டும்.
  • தங்கள் மின்னூல் கணினித் தமிழ் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.
  • அமேசான் கிண்டில் தளத்திலோ கூகுள் புத்தகம் தளத்திலோ தங்களுக்கான கணக்க உருவாக்கி அதில் தங்கள் நூலைப் பதிவேற்றலாம்.
  • தங்கள் படைப்பாக்கத்திறன் நூலின் தரம், கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
தமிழ் குறுஞ்செயலி உருவாக்கம் (Creation of Tamil Android Apps)

  • தாங்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ள குறுஞ்செயலியின் பெயர் மற்றும் விவரங்களை கூகுள் படிவத்தில் வழங்கவேண்டும்.
  • தங்கள் குறுஞ்செயலி கணினித் தமிழ் சார்ந்தாக இருத்தல் வேண்டும்
  • தங்கள் குறுஞ்செயலியின் தரம், பயன்பாடு, தொழில்நுட்பம் அடிப்படையில் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
தமிழ் மென்பொருள் உருவாக்கம் (Development of Tamil software)

  • தாங்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ள மென்பொருளின் பெயர் மற்றும் விவரங்களை கூகுள் படிவத்தில் வழங்கவேண்டும்.
  • மென்பொருள் கணினித் தமிழ் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.
  • தங்கள் மென்பொருளின்  தரம், கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.


  • வழிகாட்டும் காணொலி இணைப்புகள்







    போட்டியில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் கீழுள்ள..



    மேலும் விவரங்களுக்கு

    முனைவா் இரா.குணசீலன்

    தமிழ் இணைப்பேராசிரியர்

    தொடர்பு எண் 9894829151

    கணித்தமிழ்த் திருவிழா

      தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிதி நல்கையுடன் நம் கல்லூரியில் செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக நிகழும் கல்லூரி அளவ...